48 இந்திய மாணவர்களை திருப்பி அனுப்பிய அமெரிக்கா .., விளக்கம் கேட்ட இந்திய அரசு
கடந்த 3 ஆண்டுகளில் 48 இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பியதற்கு இந்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.
விளக்கம் கேட்கும் இந்தியா
கடந்த 3 ஆண்டுகளில் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்ட இந்திய மாணவர்களின் எண்ணிக்கையின் விவரங்கள் பற்றி தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த பி.கே.பார்த்தசாரதி இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இவரின் கேள்விக்கு இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கிர்த்தி வர்தன் சிங் பதில் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், "கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 48 மாணவர்களை அமெரிக்கா திருப்பி இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது.
ஆனால், இந்திய மாணவர்கள் எதற்காக அனுப்பப்பட்டார்கள் என்ற காரணத்தை அமெரிக்க அதிகாரிகள் இன்னும் இந்திய அரசுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இதனால், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசிடம் இந்திய அரசு கேட்டுள்ளது.
மேலும், வெளிநாடுகள் செல்வோருக்கு பாதுகாப்பு மற்றும் சட்டப் பூர்வமாக குடியேறுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |