இந்தியா மீது புதிதாக 10% இறக்குமதி வரி: இதற்கு மட்டும் வரியில் இருந்து விலக்கு: அமெரிக்கா அதிரடி
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 10% வரியை விதித்துள்ளது.
இந்தியா மீது 10% வரி விதிப்பு
கட்டாய உழைப்பு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மீதான தடையை முழுமையாக நிறைவேற்றாத இந்தியா, சீனா, மற்றும் பிரித்தானியா உட்பட 60 வர்த்தக கூட்டாளி நாடுகள் மீது அமெரிக்கா இறக்குமதி வரியை விதித்துள்ளது.
இதில் 10% முதல் 12.5% வரையிலான இறக்குமதியை வரியை அமெரிக்கா அரசு விதிக்கவுள்ளது.
இறக்குமதிகளை சார்ந்து இருக்கும் அமெரிக்கர்களின் தன்மையை குறைக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அடுத்தடுத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

அதிக ஊதியம் பெறும் அமெரிக்கர்களின் பொருட்களுக்கு பதிலாக கட்டாய உழைப்பும் மூலம் உருவாக்கப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதை தடுக்கும் சட்டங்கள் இல்லாத நாடுகள் மீது புதிய வரியானது விதிக்கப்பட்டுள்ளது.
அதில் சீனா, பிரித்தானியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு 12.5% வரி விதிப்பை அமெரிக்கா அறிவித்துள்ளது.
கட்டாய உழைப்பும் மூலம் உருவாக்கப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதை தடுக்கும் சட்டங்கள் கொண்டிருந்தாலும் அவற்றை முறையாக நடைமுறைப்படுத்தாத இந்தியா, இலங்கை மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு 10% வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா-கனடா-மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் வரும் பொருட்கள் மற்றும் எண்ணெய், எரிவாயு பொருட்கள் ஆகியவை இந்த புதிய வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
டிரம்பின் உத்தரவு படி, 1974ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வர்த்தக சட்டம் 301-ன் கீழ் 60 நாடுகள் மீதான புதிய வரியை கொண்டு வருவதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி(USTR) ஜேமிசன் கிரீர் அறிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |