அமெரிக்காவில் ஆந்திர மாநில இளைஞர் பலி: 8 மாதத்தில் நொறுங்கிய கனவு!
அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் நடந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களில் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளைஞரும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் இந்தியர் பலி
அமெரிக்காவின் Arkansas மாநிலத்தில் உள்ள Fordyce என்ற சிறிய நகரில் உள்ள மாட் பூச்சர் கிரானா கடையில்(Mad Butcher grocery store) நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்களில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
தாசரி கோபிகிருஷ்ணா( Dasari Gopikrishna) என்று அடையாளம் காணப்பட்ட இந்த 32 வயதான நபர், ஆந்திர பிரதேசத்தின் பாபட்லா(Bapatla) மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், வெறும் எட்டு மாதங்களுக்கு முன்னரே அவர் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார் எனவும் தெரியவந்துள்ளது.
ஜூன் 21 ஆம் திகதி நடந்த இந்த துப்பாக்கிச் சூடு நடந்த சமயத்தில், கோபிகிருஷ்ணா மாட் பூச்சர் கிரானா கடையில் வேலை செய்து கொண்டிருந்தார்.
துப்பாக்கிதாரி கடைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய போது, பணம் கட்டுவதற்கான கவுண்டரில் இருந்த கோபிகிருஷ்ணா கடுமையாக காயமடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், அடுத்த நாள் அவர் உயிரிழந்தார்.
சோகத்தில் குடும்பத்தினர்
இந்த துயர செய்தி கோபிகிருஷ்ணாவின் பூர்வீக கிராமத்தில் வசித்து வரும் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்துள்ளது. அவருக்கு மனைவி மற்றும் மகன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் மொத்தம் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர், ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிதாரி கடைக்குள் மற்றும் பார்க்கிங் இடத்திலும் தாக்குதல் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |