செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் தங்கம் - கணிசமாக குறைய உள்ள தங்க விலை
அணுக்கரு இணைவு மூலம் செயற்கையாக தங்கத்தை உற்பத்தி செய்ய முடியும் என நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து, சாமானியர்கள் தங்கம் வாங்குவது எட்டாக்கனியாக மாறி வருகிறது.
தங்கத்தின் தேவையும் அதிகரித்து வரும் நிலையில், உலக நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது.
தங்கம் இயற்கையாக வெட்டி எடுக்க வேண்டியுள்ளதால், செயற்கையாக தயாரிக்க முடியாது. அதன் விலை உயர்விற்கு இதுவும் காரணமாக உள்ளது.
அணுக்கரு இணைவு மூலம் தங்கம்
இந்நிலையில், தங்கத்தை செயற்கையாக தயாரிக்க முடியும் என அமெரிக்காவின், கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான மராத்தான் ஃபியூஷன் அறிவித்துள்ளது.
2 ஹைட்ரஜன் ஐசோடோப்புகளான டிரிட்டியம் மற்றும் டியூட்ரியம் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் போது, அதிக திறன் வாய்ந்த நியூட்ரான் எனப்படும் ஹீலியம் உருவாவது, அணுக்கரு இணைவு எனப்படுகிறது.
இதனுடன் குறிப்பிட்ட பாதரசம் -198 ரகத்தை மோதச் செய்யும் போது, பாதரசம் - 197 ரகமாக மாறும். அந்த அணுக்கள், அடுத்த சில நாட்களில் நிலையான தங்கமாக மாற்றமடையும்.
ஒரு அணுக்கரு மின் உற்பத்தி நிலையம், ஒரு ஜிகாவாட்டிற்கு ஆண்டுக்கு 5,000 கிலோ தங்கத்தை உற்பத்தி செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர்.
இந்த தங்கம் நிலையானது என்றாலும், அதில் கதிரியக்க தடயங்கள் இருக்கும் என்பதால், 18 ஆண்டுகள் வரை பாதுகாப்பாகச் சேமிக்கப்பட பின்னரே பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சோதனை முறையில் இந்த திட்டம் இருந்தாலும், விரைவில் சாத்தியமாகும் என அந்த நிறுவனத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு செயற்கை தங்கம் உற்பத்தி செய்யப்பட்டால், தங்கத்தின் தேவையை இதன் மூலம் பூர்த்தி செய்யப்பட்டு, எதிர்காலத்தில் தங்கத்தின் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |