தேர்தல் நாளில் ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா
அமெரிக்காவில் இன்று தேர்தல் தொடங்கும் நிலையில், ஈரானின் கெஷ்ம் தீவு மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரானின் கெஷ்ம் தீவு மீது அமெரிக்கா தாக்குதல்
அமெரிக்காவில் இன்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபைக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பதற்கான இடைக்கால தேர்தல் தொடங்கியுள்ளது.

இந்த தேர்தல் முடிந்த பின்னர், ஈரான் மீது மீண்டும் தாக்குதலை தொடங்க டிரம்ப் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், அமெரிக்காவில் தேர்தல் தொடங்கும் இன்றே ஈரானில் உள்ள கெஷ்ம் தீவு மீது அமெரிக்க ராணுவம் குறிப்பிட்ட இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.

ஹார்மோஸ் நீரிணையின் நுழைவாயில் அருகே அமைந்துள்ள இந்த தீவில், ஈரானின் எண்ணெய் மற்றும் ராணுவ கட்டமைப்புகள் உள்ளது.
கெஷ்ம் தீவில் பலத்த வெடிப்பு சத்தம் கேட்டதாக ஈரான் அரசு ஊடகமான IRNAவும் உறுதிப்படுத்தியுள்ளது.
அதேவேளையில், கெஷ்ம் தீவின் தெற்கே 2 அமெரிக்க MQM-170 ஆளில்லா விமானங்களையும், ஹோர்முஸ் நீரிணைக்குக் கிழக்கே ஒரு அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தையும் சுட்டு வீழ்த்தியதாக IRGC தெரிவித்துள்ளது.