வளர்ப்பு நாய்க்கு டிப்ளமோ பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம்: சுவாரஸ்யமான பின்னணி
அமெரிக்காவில் மாணவியுடன் சேர்ந்து அவரது வளர்ப்பு நாய்க்கும் நியூ ஜெர்சியில் உள்ள செட்டான் ஹால் பல்கலைக்கழகம் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.
மாணவியின் வளர்ப்பு நாய்க்கு டிப்ளமோ பட்டம்
அமெரிக்காவில் மாற்றுத் திறனாளி மாணவி கிரேஸ் மரியானி உடன் அவரது வளர்ப்பு நாயான ஜஸ்டின், தொடர்ந்து வகுப்பறைக்கு தவறாமல் வந்ததை பாராட்டும் விதமாக சமீபத்தில் நடைபெற்ற கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாணவி கிரேஸ் மரியானி உடன் சேர்த்து அவரது வளர்ப்பு நாயான ஜஸ்டின்-க்கும் டிப்ளமோ பட்டம் வழங்கி செட்டான் ஹால் பல்கலைக்கழகம் சிறப்பித்துள்ளது.
Seton Hall President Joseph E. Nyre, Ph.D. presents Justin, the service dog for Grace Mariani, of Mahwah, NJ, with a diploma for attending all of Grace’s classes at Seton Hall. pic.twitter.com/sZgHD5Fs3X
— Seton Hall (@SetonHall) May 23, 2023
CBS செய்தி நிறுவனம் வழங்கிய தகவலின் அடிப்படையில், ஜஸ்டின் டிப்ளமோ பட்டத்தை தனது வாயால் அழகாக கவ்வி பெற்றுக் கொண்ட போது பெரும் கரகோசம் எழுந்ததாக தெரிவித்துள்ளது.
இதே பட்டமளிப்பு விழாவில் மாணவி கிரேஸ் மரியானி கல்வியில் பிரிவில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ
வளர்ப்பு நாயான ஜஸ்டினுக்கு வழங்கப்பட்ட பட்டமளிப்பு வீடியோவை செட்டான் ஹால் பல்கலைக்கழகம் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.
இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதள பயனர்கள் தங்களது உற்சாங்களை கருத்துக்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.
Seton Hall