அமெரிக்காவில் இந்து வழிபாட்டு தளத்தின் மீது தாக்குதல் திட்டம்: 19 வயது இளைஞர் கைது
US Teen Arrested For Hindu Temple Mass Shooting Plot: அமெரிக்காவின் இந்து கோயிலை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்து வழிபாட்டு தளத்தின் மீது தாக்குதல் திட்டம்
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தின் அரோரா(Aurora) பகுதியில் உள்ள இந்து வழிபாட்டு தளத்தை குறிவைத்து நடத்தப்பட இருந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை மத்திய மற்றும் உள்ளூர் காவல் துறையினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை திட்டமிட்ட பெலேடைன்(Palatine) பகுதியைச் சேர்ந்த 19 வயது அலெக்சாண்ட்ரோஸ் பாபொராகிஸ்(Alexandros Paporakis) என்ற இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டாக்கோ பெல்(Taco Belll) என்ற உணவகத்தில் காசாளராக பணியாற்றி வரும் பாபொராகிஸ், தன்னுடைய துப்பாக்கிச் சூடு திட்டம் குறித்து நண்பர் ஒருவரிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். இதையடுத்து அந்த நபர் அளித்த புகாரின் பேரில் பாபொராகிஸ் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11ம் திகதி) இந்த தாக்குதலை நடத்த பாபொராகிஸ் முதலில் திட்டமிட்டுள்ளார். மேலும் தாக்குதலுக்கு முந்தைய நாள் ஞாயிற்றுக்கிழமை தனக்கு சிறப்பான ஒரு நாளாக இருக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை அவரது துப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, திட்டத்தை கைவிட்டு அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறி விட்டதாக தொலைபேசியில் சக ஊழியரிடம் பாபொராகிஸ் தெரிவித்துள்ளார்.
According to the latest reporting, the heavily armed gunman was already at the Hindu temple and attempted to start shooting, but the gun jammed. The man described himself as a "sociopathic white supremacist Neo-Nazi filled with hatred, fantasizing about mass murder nearly every day." Very disturbing details here: https://t.co/G2aN90yTu8
— Hindu American Foundation (@HinduAmerican) October 15, 2026
பாபொராகிஸ் திட்டம் தொடர்பாக தகவல் கிடைத்ததும் விரைந்த செயல்பட்ட காவல்துறையினர் அக்டோபர் 11ம் திகதி மாலை பாபொராகிஸ் அவரது வீட்டை விட்டு வெளியேறிய போது வெற்றிகரமாக கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞரின் வீட்டில் இருந்து பல்வேறு ஆயுதங்கள் மற்றும் தந்திரமான உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் வெள்ளை மேலாதிக்க தீவிர வாசகத்துடன் தொடர்புடைய சின்னங்கள் பொறிக்கப்பட்ட உடல் கவச உடை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.