சீனா அறிவித்த அந்த முடிவு... புதிய வரிகள் விதிக்கப்படும் என மிரட்டல் விடுத்த அமெரிக்கா
அரிய மண் தாதுக்கள் ஏற்றுமதியை சீனா தொடர்ந்து தடுக்கும் என்றால், அந்த நாட்டின் மீதான வரிகளை உயர்த்த ட்ரம்ப் நிர்வாகம் தயாராக உள்ளது என்று அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒரு வருடத்திற்கு
அரிய மண் தாதுக்கள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்கள் மீது அக்டோபரில் விதித்த கட்டுப்பாடுகளை ஒரு வருடத்திற்கு நிறுத்தி வைப்பதாக சீனா வியாழக்கிழமை அறிவித்தது.

ஆனால் சீனா எப்போதும் அதன் வாக்குறுதிகளைப் பின்பற்றுவதில்லை என்று பெசென்ட் கவலை தெரிவித்தார். அரிய மண் தாதுக்கள் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் காணப்படுகிறது.
ஆனால் தொழில்துறை பயன்பாட்டிற்காக இந்த உலோகங்களை பதப்படுத்துவதில் சீனா தற்போது ஏகபோக உரிமையைக் கொண்டுள்ளது. ட்ரம்ப் மற்றும் ஜி ஜின்பிங் இடையேயான சமீபத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த இடைநீக்கம் அறிவிக்கப்பட்டது.
நம்பகமான கூட்டாளி
இருப்பினும், சீனா முன்பு முடிவு செய்த சில ஏற்றுமதி கட்டுப்பாடுகள் தற்போதும் அமுலில் உள்ளன. இந்த நிலையில், சீனா நம்பகமான கூட்டாளியாக இருக்கும் என்று நம்புவதாகவும், இல்லை எனில் புதிய வரி விதிப்புகளை மீண்டும் விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

அரிய மண் தாதுக்கள் விவகாரத்தில் சீனா தற்போது ஏகபோக உரிமையைக் கொண்டுள்ளதற்கு முதன்மையான காரணம் ஜோ பைடன் அரசாங்கத்தின் செயலற்றத்தன்மை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |