அதிகரிக்கும் பதற்றம்... உக்ரைனிலிருந்து துருப்புகளை வெளியேற்றும் அமெரிக்கா
ரஷ்ய படையெடுப்பின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், உக்ரைனில் இருக்கும் 150 அமெரிக்க துருப்புகள் நாட்டை விட்டு வெளியேறுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரேனியப் படைகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக புளோரிடா தேசிய காவல்படையில் இருந்து உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட சுமார் 150 அமெரிக்க துருப்புக்களே உக்ரைனை விட்டு வெளியேறுவதாக அதிகாரிகள் கூறினர்.
உக்ரைனில் உள்ள சில அமெரிக்க தூதரக ஊழியர்களை வெளியேறுமாறு வெளியுறவுத்துறை உத்தரவிட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் மேலும் கூறியதாவது, துருப்புக்கள் உக்ரைனிலிருந்து எங்கு மாற்றப்படுவார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
நாட்டில் குறைந்த எண்ணிக்கையிலான அமெரிக்க சிறப்பு நடவடிக்கைப் படைகள் இருப்பதால் என்ன நடக்கும் என்பது உடனடியாகத் தெரியவில்லை.
இந்த முடிவு மிகுந்த எச்சரிக்கையுடன் எடுக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.