தலையிட விரும்பவில்லை... இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் கைவிட்ட வல்லரசு நாடு
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் தெரிவித்துள்ளார்.
பதற்றத்தைக் குறைக்க
இருப்பினும், தாமும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இரு நாடுகளையும் பதற்றத்தைக் குறைக்க ஊக்குவித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
நாம் செய்யக்கூடியது என்னவென்றால், இந்த மக்களை கொஞ்சம் கொஞ்சமாக பதட்டத்தைக் குறைக்க ஊக்குவிக்க முயற்சிப்பதுதான், ஆனால் அடிப்படையில் எங்களுக்குத் தொடர்பில்லாத போரில் அமெரிக்கா ஈடுபடப் போவதில்லை என ஜேடி வான்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்காவால் இந்தியாவையும் பாகிஸ்தானையும் கட்டுப்படுத்த முடியாது. அதனால் இந்த விடயத்தை நாங்கள் தொடர்ந்து தூதரக வழிகளில் தொடரப் போகிறோம் என்றார்.
நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்
மட்டுமின்றி, இது ஒரு தீவிரமான பிராந்தியப் போராகவோ அல்லது ஒரு அணுசக்தி மோதலாகவோ மாறப் போவதில்லை என்பதே எங்கள் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் என்றும் வான்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் மோதல் போக்கை கைவிட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தியிருந்தார். இந்த விவகாரத்தில் தமது உதவி தேவைப்படும் என்றால், அதற்கு தயார் என்றும் அவர் குறிப்பிடிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |