ஐரோப்பாவிலிருந்து படைகளை விரைவாகத் திரும்பப் பெற திட்டமிடும் அமெரிக்கா
ஐரோப்பாவில் உள்ள தளங்களிலிருந்து படைகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையைத் துரிதப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
திரும்பப் பெறும் திட்டம்
அடுத்த மாதம் தங்களது புதிய திட்டத்தை நேட்டோ உறுப்பு நாடுகளிடம் அமெரிக்கா சமர்ப்பிக்க இருப்பதாக ஜேர்மன் நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் ஐரோப்பிய வல்லரசுகளுக்கும் இடையே ஈரான் போர் தொடர்பாக ஏற்பட்ட விரிசலின் விளைவாகவே, ஜேர்மனியிலிருந்து 5,000 துருப்புகளைத் திரும்பப் பெறும் திட்டங்களை ட்ரம்ப் நிர்வாகம் மே மாதம் அறிவித்தது என பரவலாக கருதப்பட்டது.
ஐரோப்பாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு, ஜேர்மனியில் சுமார் 35,000 அமெரிக்க இராணுவ வீரர்கள் பணியில் உள்ளனர். அச்சமயத்தில், இந்தப் படைகளைத் திரும்பப் பெறும் பணி ஆறு முதல் 12 மாதங்களுக்குள் நிறைவடையும் என்று பென்டகன் தெரிவித்தது.
நேச நாடுகளிடம்
தற்போது வெளியாகியுள்ள தகவலில், படைகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கை எவ்வளவு விரைவாக இருக்கும், அல்லது எந்த இடங்கள் இத்னால் பாதிக்கப்படக்கூடும் உள்ளிட்ட தகவல் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

ஆனால், அடுத்த மாதம் நடைபெறவுள்ள நேட்டோ படைத் திரட்டல் மாநாட்டில், தனது திட்டங்களை நேச நாடுகளிடம் அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |