ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க துருப்புகள் - செங்கடலில் நடமாடும் மர்மக்கப்பல்கள்
ஈரானை நோக்கி அமெரிக்கா தனது போர் கப்பல்களை நகர்த்தி வரும் நிலையில், செங்கடலில் மர்மக்கப்பல்கள் உலாவி வருவதாக கூறப்படுகிறது.
ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க துருப்புகள்
ஈரானில் அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஈரானை தாக்கும் நோக்கில் மத்திய கிழக்கு நோக்கி அமெரிக்கா தனது போர் கப்பல்களை நகர்த்தி வருகிறது.

அதேவேளையில் அமெரிக்காவின் நிபந்தனைகளை ஒரு போதும் ஏற்க முடியாது என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா கடற்படை கப்பல்கள் பாரசீக வளைகுடாவிற்கு வந்தடைந்ததும், அமெரிக்கா ஈரான் மீது தாக்குதலை தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தனது ராணுவத்தில் ஆயிரக்கணக்கில் ட்ரோன்களை சேர்த்துள்ள ஈரான், அமெரிக்காவை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.
இதனிடையே, ஈரானில் உள்ள அணு உற்பத்தி நிலையங்களை முதலில் தாக்க உள்ளதாகவும், செங்கடல் பகுதியில் மர்மமான முறையில் அமெரிக்கா கப்பல்கள் உலவுவதாகவும் கூறப்படுகிறது.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |