காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க படைகள் துப்பாக்கிச் சூடு! பீதியில் உறைந்த ஆயிரக்கணக்கான மக்கள்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க படைகள் துப்பாக்கியால் சுட்டு அட்டூழியத்தில் ஈடுபடுவதாக சம்பவயிடத்திலிருந்து நபர் ஒருவர் தகவல் அளித்ததாக மேற்கோள் காட்டி AFP செய்தி வெளியிட்டுள்ளது.
காபூல் விமான நிலையத்தில் குவிந்தத ஆயிரக்கணக்கானோர், விமானத்தில் ஏற மல்லுகட்டுவதால் அங்கு பரபரப்பு சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க படைகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்துவதாக சம்பவயிடத்தில் இருந்து நபர் ஒருவர் தகவல் தெரிவித்ததாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.
Desperate situation unfolding at #Kabul airport this morning.#Afganistan pic.twitter.com/EMgK3rduOL
— BANDIT XRAY ?? ⚔ (@BANDIT_XRAY) August 16, 2021
நாட்டை விட்டு வெளியேறும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.
இவ்வாறான பரபரப்பு சூழல் நிலவி வரும் காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க படைகள் வானத்தை நோக்கி பல முறை துப்பாக்கியால் சுடுகிறார்கள்.
இதனால், மக்கள் இங்கு மிகவும் பயத்தில் இருக்கிறார்கள் என சம்பவயிடத்தில் இருந்து நபர் ஒருவர் தகவல் தெரிவித்ததாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.