சீனா மீது 50% முதல் 100% வரி விதிப்பு: நேட்டோ நாடுகளுக்கு டிரம்ப் அழைப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியுறவு கொள்கையில் புதிய மாற்றம் ஒன்றை முன்மொழிந்துள்ளார்.
சீனாவுக்கு 100% வரை வரி
வெளியுறவு கொள்கையில் புதிய மாற்றத்தை முன்மொழியும் விதமாக நேட்டோ உறுப்பு நாடுகள் சீனா மீது 50% முதல் 100% வரி விதிப்பை அமுல்படுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த புதிய வரி நடைமுறை சீனாவிற்கு அழுத்தம் கொடுக்கும் நடைமுறையாக இருக்கும் என்றும், ரஷ்யா - உக்ரைன் போர் முடியும் வரை இவை அமுலில் இருக்கலாம் என்றும் இது தொடர்பாக சனிக்கிழமை வெளியிட்ட கடிதத்தில் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.
டிரம்ப் அவரது சமூக வலைதளமான ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த கடிதத்தில், ரஷ்யாவுக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை எடுத்துரைத்துள்ளார்.
அத்துடன் நேட்டோ நாடுகள் ஒரே மாதிரியான வரி விதிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறு செய்தால் தான் ரஷ்யா மீது பெரிய அளவிலான தடைகளை விதிக்க தான் தயாராக இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம் சீனா மற்றும் ரஷ்யா மீதான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளே உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வர உதவும் என்று டிரம்ப் நம்புவதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |