11 ஏவுகணைகள், 4 பாதுகாப்பு அடுக்குகள்., அமெரிக்காவின் Golden Dome திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
அமெரிக்காவின் Golden Dome திட்டத்தின் முக்கிய சாராம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் முன்மொழிந்துள்ள Golden Dome திட்டம் இஸ்ரேலின் Iron Dome பாதுகாப்பு அமைப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்படவுள்ளது.
இது அமெரிக்காவை ஏவுகணை தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் அதிநவீன, பல அடுக்கு பாதுகாப்பு கொண்ட அமைப்பாகும்.
Golden Dome திட்டம் 4 பாதுகாப்பு அடுக்குகளைக் கொண்டுள்ளது.
அதில் ஒன்று, செயற்கைகோள் அடிப்படையிலான பாதுகாப்பு அடுக்கு - ஏவுகணைகளைக் கண்டறிந்து கண்காணிக்கும்.
மற்ற 3 அடுக்குகள், ஏவுகணை தடுப்பு அமைப்பு, ரேடார் அமைப்பு மற்றும் லேசர் தொழில்நுட்பம் ஆகியவையாகும்.
மேலும் இதில் 11 short range ஏவுகணை தடுப்பு அமைப்புகள் அமெரிக்கா முழுவதும், அலாஸ்கா மற்றும் ஹவாய் ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ளன.
சுமார் 175 பில்லியன் டொலர் மதிப்பு கொண்ட இத்திட்டத்தை 2028-ஆம் ஆண்டுக்குள் நிறைவுசெய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
ஆரம்ப கட்டத்தில் இருக்கும் இத்திட்டத்திற்கு, காங்கிரஸ் இதுவரை 25 பில்லியன் டொலர் நிதி ஒதுக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Golden Dome Defense system, Golden Dome Missile defence, Trumps Golden Dome project, Golden Dome vs Iron Dome, US Golden Dome Missile defence