ரஷ்யாவை போரில் இழுத்து விட அமெரிக்கா முயற்சிக்கிறது! புடின் பரபரப்பு குற்றச்சாட்டு
உக்ரைன் மீதான போரில் தனது நாட்டை இழுத்து விட அமெரிக்கா முயற்சிப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குற்றம்சாட்டியுள்ளார்.
ஐரோப்பிய நாடான உக்ரைனின் எல்லைக்கு அருகே ரஷ்ய அதன் படைகளை குவித்துள்ளதால் இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷ்ய கடும் விளைவுகளை சந்திக்கும் என மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை எச்சரித்துள்ளன.
உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் குற்றம் சாட்டுகின்றன, ஆனால் ரஷ்யா பலமுறை இதை மறுத்துள்ளது.
இந்நிலையில், தனது நாட்டை போரில் இழுத்து விட அமெரிக்கா முயற்சிப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த மோதலை பயன்படுத்தி ரஷ்யா மீது கூடுதல் தடைகளை விதிப்பதே அமெரிக்காவின் குறிக்கோள் என புடின் தெரிவித்தார்.
நேட்டோ - மேற்கத்திய இராணுவக் கூட்டணியின் ஐரோப்பிய விரிவாக்கம் குறித்த ரஷ்யாவின் கவலைகளை அமெரிக்கா புறக்கணிப்பதாகவும் புடின் கூறினார்.