வாட்டும் உக்ரைன் போர் சோர்வு…ஜெலென்ஸ்கியை வற்புறுத்தும் அமெரிக்கா
ஜெலென்ஸ்கியை தனிப்பட்ட முறையில் வற்புறுத்தும் அமெரிக்கா.
போர் பல ஆண்டுகளாக இழுக்கப்படலாம் என்று கவலை
ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்குமாறு ஜெலென்ஸ்கியை அமெரிக்கா வலியுறுத்துகிறது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை பல மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த போர் நடவடிக்கை உலக அளவில் மிகப்பெரிய அளவில் சோர்வை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிக்கைகள் வெளியிட்டாலும், புடின் ஆட்சியில் இருக்கும் வரை ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை சாத்தியமற்றது என்ற ஆணையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அக்டோபரில் கையெழுத்திட்டார்.
GETTY
ஆனால் எதிர்காலத்தில் மற்றொரு ரஷ்ய தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து பரிசீலிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தயாராக இருப்பதாக தெரிவிக்குமாறு தனிப்பட்ட முறையில் வற்புறுத்துகிறது என அமெரிக்க அதிகாரிகளை சுட்டிக்காட்டி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆதாரங்களின்படி அமெரிக்காவின் குறிக்கோள் உக்ரைனை அமைதி பேச்சுவார்த்தை மேசைக்கு தள்ளுவது அல்ல, ஆனால் ரஷ்யாவுடனான போரில் மற்ற நாடுகள் தொடர்ந்து ஆதரவளிப்பதை உறுதி செய்வதாகும், ஏனெனில் போர் பல ஆண்டுகளாக இழுக்கப்படலாம் என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள் என தெரியவந்துள்ளது.
EPA
கூடுதல் செய்திகளுக்கு: சாவின் விளிம்பில் நிற்கும் மனைவி: பணத்தை கொட்டி கனவு திருமணத்தை நிறைவேற்றிய கணவர்
மேலும் எங்களின் சில கூட்டாளிகளுக்கு, உக்ரைன் போர் மீதான சோர்வு என்பது உண்மையான விஷயம் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.