வான்வழித் தாக்குதல்களுக்கு AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அமெரிக்கா!
அமெரிக்கா அதன் இராணுவ நடவடிக்கைகளில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
2022-இல் ChatGPT பிரபலமடைந்தபோது, AI மீதான ஆர்வம் புதிய உச்சத்தை எட்டியது.
விரைவில், உலகெங்கிலும் உள்ள இணைய பயனர்கள் AI கருவியைப் பரிசோதித்து, அதை பல்வேறு வழிகளில் பயன்படுத்துகின்றனர்.
Battery விலை குறைந்ததால், டாடா மோட்டார்ஸ் எடுத்த முடிவு: Nexon, Tiago கார்களின் விலை அதிரடி குறைப்பு
AI இன் விரைவான முன்னேற்றத்தைப் பார்க்கும்போது, பல்வேறு வல்லுநர்கள் இராணுவ நடவடிக்கைகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கண்டறிந்தனர்.
ஆனால், ஏற்கனவே இது நடைமுறையில் வந்துவிட்டது போல் தெரிகிறது.
அமெரிக்கா ஏற்கனவே ராணுவ நடவடிக்கைகளில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது என ப்ளூம்பெர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், இந்த மாத தொடக்கத்தில், மத்திய கிழக்கில் வான்வழித் தாக்குதலுக்கான இலக்குகளைக் கண்டறிய AI-இன் உதவியை அமெரிக்கா நாடியது.
போர்ச் சூழல்களில் அமெரிக்க ராணுவம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. வான்வழித் தாக்குதல்களுக்கான இலக்குகளை அடையாளம் காண பென்டகன் computer vision algorithmகளை பயன்படுத்தியுள்ளதாக, ப்ளூம்பெர்க் அறிக்கை கூறுகிறது.
மத்திய கிழக்கில் இம்மாதம் 2-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட பணியில் AI அல்காரிதம்களின் உதவியுடன் 85க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தொழில்நுட்பத்தின் உதவியுடன், ஈராக் மற்றும் சிரியாவில் ரொக்கெட்டுகள், ஏவுகணைகள், ட்ரோன் சேமிப்பு மற்றும் போராளிகளின் நடவடிக்கைகள் அடையாளம் காணப்பட்டு தாக்கப்பட்டன
வான்வழித் தாக்குதல்களுக்குத் தேவையான அல்காரிதம்கள், Project Mavenன் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டன, இது பாதுகாப்புத் துறையில் ஆட்டோமேஷனை அதிகரிக்க 2017-இல் நிறுவப்பட்டது என்று அமெரிக்க மத்திய கட்டளையின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி Schuyler Moore கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
USA using AI in military operations, Artificial Intelligence, AI Technology, AI Uses