புடினுடன் செல்லும் நிருபர்களுக்கு அமெரிக்க விசா: போர் தொடங்கியதிலிருந்து முதல் முறை
ஜனாதிபதி ட்ரம்ப்பை சந்திக்க செல்லும் புடினுடன் செல்லும் நிருபர்களுக்கு அமெரிக்க விசா வழங்கப்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்ய பத்திரிகையாளர்கள்
அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பும் (Donald Trump), ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் (Vladimir Putin) சந்தித்து பேச உள்ளனர்.
உலகளவில் முக்கியமான சந்திக்க இது பார்க்கப்படும் நிலையில், மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ரஷ்ய பத்திரிகையாளர்கள் (Kremlin pool) தங்கள் விசாக்களைப் பெற்றுள்ளனர்.
உக்ரைனுக்கு எதிரான தாக்குதல் 2021யில் தொடங்கியதில் இருந்து முதல் முறையாக, ரஷ்ய நிருபர்களுக்கு அமெரிக்க விசா வழங்கப்பட்டுள்ளது.
ஒற்றை நுழைவு
மேலும், பல ஆண்டுகளில் முதல் முறையாக அவை அங்கீகரிக்கப்பட்டதாகவும் ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிட்டத்தட்ட அனைத்து நிருபர்களுக்கும் ஒற்றை நுழைவு பத்திரிகையாளர் விசாக்கள் வழங்கப்பட்டன.
எனினும் சில பாஸ்போர்ட்கள் இன்னும் திருப்பித் தரப்படவில்லை என்றும், விசாக்கள் நவம்பர் 11ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |