இந்தியாவுக்கு யாரும் போகாதீங்க! பெண் சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை
பெண்களுக்கு எதிராக பல குற்றங்கள் அதிகரித்து வருவதால் சுற்றுலா வரும் பெண் பயணிகளை இந்தியாவுக்கு வரவேண்டாம் என டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்து விட்டதால் அமெரிக்கர்கள் 2 தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தால் இந்தியப்பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் தங்கள் நாட்டு சுற்றுலா பயணியருக்கான பயண ஆலோசனை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. சுற்றுலா தலங்கள் உட்பட பல்வேறு இடங்களில் கொடூரமான வன்முறைகள், பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்துள்ளன.
எனவே அமெரிக்க சுற்றுலா பயணியர் குறிப்பாக பெண்கள் தனியாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அதில் கூறப்பட்டுள்ளது.