கடற்கரை நோக்கி விரையும் அமெரிக்க போர் கப்பல்கள் - தாக்குதலுக்கு தயாராகிறதா அமெரிக்கா?
வெனிசுலா நோக்கி அமெரிக்கா தனது 3 போர் கப்பல்களை அனுப்பியுள்ளது.
வெனிசுலா அதிபர் உடன் மோதல்
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது முதல் பதவி காலத்திலேயே வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுராவுடன் (Nicolas Maduro) மோதல் போக்கை கடைபிடித்து வந்தார்.
வெனிசுலா அதிபர் மதுராவை போதைப்பொருள் பயங்கரவாதி என குற்றஞ்சாட்டியுள்ள டிரம்ப் அரசு, 2020 ஆம் ஆண்டு அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
மேலும், வெனிசுலா மீது பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்கா,வெனிசுலா அரசு, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை சொத்துக்களை அமெரிக்காவில் முடக்கியுள்ளது.
சமீபத்தில், நிக்கோலஸ் மதுராவை கைது செய்ய உதவுபவர்களுக்கு வழங்கப்படும் வெகுமதியை இரண்டு மடங்காக உயர்த்தி, 50 மில்லியன் டொலராக அறிவித்தது.
மேலும், "அமெரிக்காவில் போதைப்பொருள் நுழைவதை தடுக்க, அமெரிக்காவின் அனைத்து கூறுகளையும் பயன்படுத்த டிரம்ப் தயாராக உள்ளது.
நமது நிர்வாகத்தின் பார்வையில் மதுரோ சட்டபூர்வ அதிபர் இல்லை, அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட தப்பியோடிய கும்பலின் தலைவர்" என வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கரோலின் தெரிவித்தார்.
விரையும் அமெரிக்க போர் கப்பல்கள்
இந்நிலையில், யுஎஸ்எஸ் சான் அன்டோனியோ(USS San Antonio), யுஎஸ்எஸ் இவோ ஜிமா(USS Iwo Jima) மற்றும் யுஎஸ்எஸ் ஃபோர்ட் லாடர்டேல்(USS Fort Lauderdale) ஆகிய 3 ஏவுகணை எதிர்ப்பு போர் கப்பல்களை வெனிசுலா கடற்பரப்பு நோக்கி அமெரிக்கா அனுப்பியுள்ளது.
2,200 கடற்படையினர் உட்பட 4,500 அமெரிக்கா வீரர்களை ஏற்றி செல்லும் இந்த கப்பல்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை வெனிசுலா கடற்பகுதி நோக்கி வந்து சேரும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், 4.5 மில்லியன் வீரர்களுடன் முழு நாட்டையையும் பாதுகாக்கும் சிறப்பு திட்டத்தை இந்த வாரத்தில் செயல்படுத்துவேன் என நிக்கோலஸ் மதுரா தெரிவித்துள்ளார்.
மேலும், வெனிசுலாவில் ட்ரோன் பறப்பதற்கும் தடை விதித்துள்ளார். இது கடல் தாக்குதலை விட வான் தாக்குதலை எதிர்பார்ப்பதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது.
உலக நாடுகளுக்கிடையேயான போர்களை நிறுத்தி வருவதாக கூறும் டிரம்ப், போர் கப்பல்களை நகர்த்துவதன் மூலம் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் வெனிசுலா மீது தாக்குதல் நடத்த உள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |