அமெரிக்காவில் நள்ளிரவில் நடந்த துப்பாக்கி சூடு: ஒருவர் பலி, 20 பேர் படுகாயம்
அமெரிக்காவின் வில்லோபுரூக்கில் இரவு நேரத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருப்பதுடன் 20 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு
அமெரிக்காவின் இல்லினாய்ஸ்(Illinois) வில்லோபுரூக்கில்(Willowbrook) இரவு நேரத்தில் நடந்த ஜூன்டீனத் கொண்டாட்டத்தில் திடீரென துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியது.
சாட்சியங்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12,30 மணியளவில் வில்லோபுரூக்கில் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் அரங்கேறி இருப்பதாக தெரியவந்துள்ளது.
AP
இதையடுத்து இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்து இருப்பதுடன் 20 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இந்நிலையில் துப்பாக்கி சூடு சம்பவத்தின் நோக்கம் இன்னும் தெளிவாக தெரிய வரவில்லை மேலும் விசாரணை தீவிரமாக நடந்து வருவதாக டுபேஜ் கவுண்டி துணை ஷெரீப் எரிக் ஸ்வான்சன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
Network Video Productions
இதற்கிடையில் துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 10 பேர் அருகிலுள்ள நான்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பதாகவும் அதில் இரண்டு பேர் மிகவும் தீவிரமான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 12 ஆம்புலன்ஸ்கள் அவசர உதவிகளுக்காக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன.
இதற்கு முன்னதாக சனிக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் டீனேஜர்கள் உட்பட 8 பேர் வரை காயமடைந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |