தன்னை விட 16 வயது குறைவான பாகிஸ்தானியர்! மதம் மாறி கைப்பிடித்த அமெரிக்க பெண்
பாகிஸ்தான் இளைஞரை 16 வயது மூத்த அமெரிக்கப் பெண் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
பேஸ்புக் காதல்
அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த 47 வயது பெண் மிண்டி ராஸ்முஸன்.
இவர் பேஸ்புக்கில் இளைஞர் ஒருவருடன் நட்பாக பேசி வந்துள்ளார்.
சஜித் செப் கான் என்ற அந்த இளைஞர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாற இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.
சஜித்திற்கு வயது 31 என்பதால் இருவருக்குமான வயது வித்தியாசம் 16 ஆகும். ஆனாலும் தங்கள் காதலை குடும்பத்தினரிடம் கூறி சம்மதம் பெற்றுவிட்டனர்.
இஸ்லாமிய முறைப்படி திருமணம்
இதனைத் தொடர்ந்து 90 நாட்கள் விசாவில் பாகிஸ்தானுக்கு சென்ற மிண்டி, இஸ்லாம் மதத்திற்கு மாறி தனது பெயரை சுலேகா என மாற்றிக் கொண்டார்.
அதன் பின்னர் இருவரும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
பாகிஸ்தானின் கலாச்சாரம், இயற்கை அழகை நேரில் காண வருமாறு கூறிய மிண்டி, தனிப்பட்ட முடிவில் மதம் மாறியதாகவும் குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |