2,645 லிட்டர் தாய்ப்பால் தானம்! உலக கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த 36 வயது பெண்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் தாய்ப்பால் தானம் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
தாய்ப்பால் தானம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த அலிசா ஓக்லெட்ரீ(Alyssa Ogletree) தனது சொந்த சாதனையை முறியடித்து, அதிக அளவு தாய்ப்பால் தானம் செய்த பெண்மணி என்ற உலக சாதனை படைத்துள்ளார்.
36 வயதான அலிசா ஓக்லெட்ரீ ஆச்சரியமூட்டும் விதமாக 2,645.58 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்துள்ளார்.
இது 2014 இல் அவர் படைத்த 1,569.79 லிட்டர் என்ற முந்தைய சாதனையை தாண்டியுள்ளது.
அலிசா ஓக்லெட்ரீயாவின் இந்த அசாதாரண சாதனை கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளது.
உயிர்காக்கும் பணியில் ஓக்லெட்ரீ
நார்த் டெக்சாஸின் தாய்ப்பால் வங்கியின் கூற்றுப்படி, ஒரு லிட்டர் தாய்ப்பால் 11 முன்கூட்டியே பிறந்த குழந்தைகளுக்கு போதுமானது.
இதன் அடிப்படையில், ஓக்லெட்ரீ வழங்கிய தாய்ப்பால் தானம் 350,000 க்கும் அதிகமான குழந்தைகளுக்கு உதவியிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அலிசா ஓக்லெட்ரீயின் பயணம் 2010ம் ஆண்டு அவரது மகன் கைல் பிறந்தபோது தொடங்கியுள்ளது.
அலிசா ஓக்லெட்ரீக்கு அதிக அளவு பால் சுரக்கும் தன்மை இருப்பதை கண்டறிந்த பிறகு, அவரை தாய்ப்பால் தானம் செய்யுமாறு அப்போது செவிலியர் ஒருவர் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதனை ஏற்றுக் கொண்டு தாய்ப்பால் தானம் செய்ய தொடங்கிய அலிசா ஓக்லெட்ரீ உலக சாதனை படைத்து இருப்பதுடன் மற்றவர்களையும் தாய்ப்பால் தானம் செய்யுமாறு ஊக்குவிக்க விரும்புகிறார்.
அலிசா ஓக்லெட்ரீயின் அதிகப்படியான பால் சுரப்பதற்கான காரணம் தெரியவில்லை என்றாலும், அவர் தொடர்ந்து தாய்ப்பால் தானத்தை செய்து வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |