அமெரிக்காவில் பரோலில் வெளிவந்த காதலன்: போர்வையில் சுற்றப்பட்டு இறந்து கிடந்த காதலி
அமெரிக்காவில் துஷ்பிரயோக செயலில் ஈடுபட்ட காதலன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒரு சில நாட்களில் காதலி கொலை செய்யப்பட்டு போர்வையில் சுற்றப்பட்டு வைக்கப்பட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண்
அமெரிக்காவில் மினசோட்டா ராணுவ வீரரான டானிக்கா பெர்கேசன் என்ற பெண் (Danicka Bergeson, 33) அவரது துஷ்பிரயோக செயலில் ஈடுபட்ட காதலன் சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்ட 11 நாட்களுக்கு பிறகு அவரது ஹாப்கின்ஸ் வீட்டில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
புதன்கிழமை குடியிருப்பு கட்டிடத்தின் மேலாளர் டானிக்கா பெர்கேசன் வீட்டில் இருந்து கத்துதல் மற்றும் பயங்கர சத்தங்கள் கேட்பதாக பொலிஸாருக்கு புகார் வழங்கியுள்ளார்.
GO FUND ME
பொலிஸார் டானிக்கா பெர்கேசன் வீட்டை சோதனையிட்ட போது அவர் கொலை செய்யப்பட்டு போர்வையில் சுற்றப்பட்டு கிடந்தார் என தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் அவரது காதலன் மேத்யூ ஸ்காட் ப்ரென்னெமன் சந்தேக நபராக இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பரோலில் விடுவிக்கப்பட்ட காதலன்
காதலன் மேத்யூ ஸ்காட் ப்ரென்னெமன் நடந்த கொலை சம்பவத்திற்கு சில தினங்களுக்கு முன்பு தான் சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்டு இருந்தார்.
Joe Raedle
மேத்யூ ஸ்காட் ப்ரென்னெமன் ஜூனில் இரண்டு தனித்தனி குடும்ப வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், சிறையில் இருந்து வெளியேறிய பிறகு காதலி டானிக்கா பெர்கேசனை தொடர்பு கொள்ள மாட்டேன் என பரோல் ஒப்பந்தத்தில் வாக்குறுதி அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஏப்ரலில் குடிபோதையில் பெர்கேசனை கடித்த குற்றத்தை காதலன் மேத்யூ ஸ்காட் ப்ரென்னெமன் ஒப்புக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Danicka Bergeson, Matthew Scott Brenneman