உலகில் 90 சதவீத அணு ஆயுதங்கள் இந்த நாடுகளிடம் தான் உள்ளது! பேரழிவை உண்டாக்கும் என எச்சரிக்கும் சீனா
உலகில் 90 சதவீத அணு அயுதங்கள் ரஷ்யா மற்றும் அமெரிக்காவிடம் தான் உள்ளதாக சீனா வெளிப்படையாக கூறியுள்ளது.
சீனா சமீபகாலமாக அணு ஆயுதங்களை நவீனமயமாக்கிக் கொண்டு வருகிறது.
ஆனால், நவீனமயமாக்கப்படும் அணு ஆயுதங்களை வைத்து, போர்களில் ஈடுபடும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், அணு ஆயுதங்கள் தொடர்பான வல்லரசு நாடுகள் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில், பிரித்தானியா, பிரான்ஸ் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கலந்து கொண்டன. இதையடுத்து, சீன வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், உலக அளவில் 90 சதவீத அணு ஆயுதங்கள் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் உள்ளன. அவர்கள் கட்டாயமாக தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை குறைக்க வேண்டும்.
அதுதான் நியாயமாக இருக்க முடியும். அமெரிக்கா சொல்வதைப் போன்று சீனாவுக்கு, அணு ஆயுதங்களை பெருக்கும் எந்த எண்ணமோ, திட்டமோ கிடையாது.
நாட்டின் பாதுகாப்பு கருதி குறைந்த எண்ணிக்கையில் நாங்கள் அணு ஆயுதங்களை உருவாக்கி வைத்துள்ளோம். அவற்றை நவீனப்படுத்தும் நடவடிக்கை மட்டுமே நடைபெறுகிறது. தாய்வான் மீது அணு ஆயுத தாக்குதல்களை சீனா ஒருபோதும் நடத்தாது.
நிச்சயமாக அணு ஆயுதங்கள் பேரழிவை உருவாக்கும். அவற்றை போரில் பயன்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.