நாங்கள் குறி வைத்தவனை கொன்றுவிட்டோம்! காபூல் விமானநிலைய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய தீவிரவாதி தொடர்பில் கெத்தாக அறிவித்த அமெரிக்கா
காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு பழிவாங்க ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில் நாங்கள் குறி வைத்தவனை கொன்றுவிட்டோம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அமெரிக்க ராணுவத்தின்உ Central Commandன் செய்தி தொடர்பாளர் கேப்டன் பில் அர்பன் வெளியிட்டுள்ளார்.
கொல்லப்பட்ட அந்த தீவிரவாதி தான் காபூல் விமான நிலைய தற்கொலைப்படை தாக்குதலுக்கு மூளையாக இருந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
அதற்கு பதிலடி கொடுக்கவே அமெரிக்க வீரர்கள் ட்ரோன் மூலம் வான்வழி தாக்குதலை நடத்தினார்கள். அதன்படி தாக்குதலானது ஆப்கானிஸ்தானின் Nangahar மாகாணத்தில் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
காபூல் விமான நிலைய தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 13 பேர் உள்ளிட்ட 100க்கும் அதிகமானோர் கொல்லபப்ட்டிருந்தனர்.
அதற்கு பதிலடி கொடுப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் இந்த வான் வழி தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.