தாலிபான்களுக்கு அதிரடியாக செக் வைத்த நாடு! அவர்களின் பல பில்லியன் கணக்கிலான பணம் முடக்கம்... மொத்தம் எவ்வளவு தெரியுமா?
தாலிபான்களுக்கு சொந்தமான 10 பில்லியன் டொலர் பணத்தை அமெரிக்கா அதிரடியாக முடக்கியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பயங்கரவாத அமைப்பு ஆட்சியை பிடித்துள்ளது.
தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பெண்களின் நிலை குறித்த அச்சங்கள் எழுந்துள்ள நிலையில் நாங்கள் பொதுமக்களை எதுவும் செய்ய மாட்டோம், அனைவரும் பயப்படாமல் இருக்கலாம் என தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.
ஆனால் அங்குள்ள அழகு நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள பெண்களின் புகைப்படங்களை பெயிண்ட் கொண்டு அழிக்கும் பணிகளில் தலிபான்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தாலிபான்களுக்கு அமெரிக்கா அதிரடியாக ஒரு செக் வைத்துள்ளது.
அதாவது, ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்துள்ள தாலிபான் அமைப்பினர் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் இருப்பதால் அவர்கள் நிதியைப் பயன்படுத்த முடியாத நிலையை அமெரிக்கா உருவாக்கியுள்ளது.
இதற்காக ஆப்கன் மத்திய வங்கிக்குச் சொந்தமான 9.5 பில்லியன் டொலர் சொத்துக்களை முடக்கியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் மொத்த சர்வதேச இருப்புக்களில் தாலிபான்களுக்கு அணுகக்கூடிய நிதி ஒரு விழுக்காடுக்கும் குறைவாகவே இருக்கும் என அமெரிக்க கருவூலத்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் எல் யெல்லன் மற்றும் கருவூலத் துறையின் வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு அலுவலகத்தின் அதிகாரிகள் அமெரிக்க வங்கிகளில் உள்ள ஆப்கானிஸ்தான் அரசு இருப்புக்களை முடக்க உத்தரவிட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.