ஆட்டம் போடும் ரஷ்யா! உக்ரைனுக்கு மீண்டும் கைகொடுக்கும் அமெரிக்கா
உக்ரைனுக்கு மேலும் 300 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 38-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் உக்ரைனுக்கு ஏற்கனவே 1.6 பில்லியன் டொலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.
இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 300 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை அமெரிக்காவின் ராணுவ தலைமையிடமான பென்டகன் இன்று அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் உக்ரைனுக்கு ராணுவ உபகரணங்கள், வெடிபொருட்கள், ராக்கெட்டுகள், மருந்துப்பொருட்கள் உள்பட பல்வேறு ராணுவ ஆயுதங்களை அமெரிக்கா வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.