ரஷ்ய ராணுவ தளபதிகள் புடின் இடையே மோதல்! உக்ரைனில் போர் நடக்கும் சூழலில் திடீர் திருப்பம்
ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கும், அந்நாட்டை சேர்ந்த ராணுவ தளபதிகளுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் தாக்குதல் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி முதல் நடந்து வருகிறது.
உக்ரைனை எளிதாக கைப்பற்றிவிடலாம் என ரஷ்யா கணக்கு போட்டது. ஆனால் உக்ரைன் மீது நடத்திய போரில் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிட்டவில்லை, ஏனெனில் அந்தளவுக்கு உக்ரைன் பதிலடி தாக்குதலை நடத்துகிறது.
இதன் காரணமாக தற்போது ரஷ்ய ராணுவ தளபதிகள், ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான உளவுத்துறை தகவல் அமெரிக்காவுக்கு கிடைத்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவிக்கிறது. போரை நடத்த சில தளபதிகளே முன்மொழிந்ததாகவும், இதனை புடின் புறக்கணித்திருக்கலாமோ என்று தற்போது சிந்திப்பதாகவும் கூறப்படுகிறது.
உக்ரைனில் சண்டை நடக்கும் சூழலில் ரஷ்யாவிற்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.