அமெரிக்க மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு! 4 பேரை சுட்டு கொன்ற தாக்குதல்தாரி தன்னை தானே சுட்டு தற்கொலை
அமெரிக்காவில் மருத்துவமனை வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியானார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
ஓக்லகாமா மாகாணத்தில் உள்ள Tulsa medical மருத்துவமனை வளாகத்தில் தான் இந்த சம்பவம் புதன்கிழமை நடந்துள்ளது. 4 பேரை கொன்ற பின்னர் தாக்குதல்தாரி தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு கொண்டு உயிரை மாய்த்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கொடூர தாக்குதலுக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. குறித்த தாக்குதல்தாரி தாக்குதலின் போது கைத்துப்பாக்கி மற்றும் பெரிய துப்பாக்கி என இரண்டையும் வைத்து சுட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகாரிகள் தற்போது கட்டிடத்தில் உள்ள ஒவ்வொரு அறையிலும் கூடுதல் அச்சுறுத்தல் உள்ளதா என சோதனை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தில் காயமடைந்தவர்களும் உள்ளனர் என தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச்சூட்டின் போது அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி பலரிடமும் சென்று மருத்துவ மையத்தை விட்டு வெளியேறும்படி கூறியதாகவும், மருத்துவர் பிலிப்ஸ் என்பவரை தேடுவதாகவும் கூறியதாக தெரிகிறது.[
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான நிலைமையை வெள்ளை மாளிகை நிலைமையை கண்காணித்து வருவதாக ஜனாதிபதி பைடன் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட டெக்சாஸில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள், 2 ஆசிரியர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.