உக்ரைன் போரால் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாப நிலை! வேறு நாட்டில் தவிப்பில் வாழும் கணவன்
உக்ரைனை சேர்ந்த புதுப்பெண் ஒருவர் போர் சண்டை காரணமாக கணவரை பிரிந்து வேறு நாட்டிற்கு அகதியாக தப்பி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
உக்ரைனை சேர்ந்தவர் நசர் போரோ (26). இவர் அமெரிக்காவின் நிரந்திர குடியுரிமை பெற்று கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். நசருக்கும் உக்ரைனை சேர்ந்த தஷா (21) என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் நசர் அமெரிக்காவில் இருக்க, உக்ரைன் - ரஷ்யா போர் சமயத்தில் தஷா உக்ரைனில் இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் போரில் இருந்து தப்பி போலாந்து தலைநகர் வர்சாவில் அகதியாக தஷா தனது தாயாருடன் சேர்ந்து தஞ்சமடைந்தார். அமெரிக்காவின் சுங்கம் மற்றும் குடிவரவு சேவைகள் மூலம் மீண்டும் தாங்கள் இணைக்கப்பட வேண்டும் என்ற நம்பிக்கையில் நண்பர்களின் வீடுகளில் தங்கியிருந்தார் தஷா.
தற்போது நசர் தான் மனைவிக்கு பணம் அனுப்புகிறார், மேலும் அவர் இப்போது பாதுகாப்பாக இருக்கிறார் என்பதால் சிறிது ஆறுதல் காண்கிறார். அதே சமயம் விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கும் பெறுவதற்கும் பல ஆண்டுகள் ஆகலாம், ஆனால் உக்ரைன் - ரஷ்யா போர் சூழலில் பல அகதிகளுக்கு உடனடி உதவி தேவைப்படுகிறது.
இது தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்து பிரிந்த குடும்ப உறுப்பினர்களை ஒன்றிணைக்க வேண்டும் என கூறுகிறார் நசர். இதற்கிடையில், நன்கொடைகள் மற்றும் பிற முயற்சிகள் மூலம் உக்ரைனில் அகதிகள் நெருக்கடியை ஆதரிக்கும் முயற்சிகளைத் தொடருமாறு மக்களை அவர் வலியுறுத்துகிறார்.