ரஷ்ய உளவு செயற்கைக்கோள் குறித்த உண்மையை வெளிப்படுத்திய அமெரிக்கா! நீடிக்கும் மர்மம்
ரஷ்ய இராணுவத்திற்கு சொந்தமான உளவு செயற்கைக்கோள் நடுவானில் உடைந்ததாக அமெரிக்க விமானப்படை தரவை மேற்கோள் காட்சி space-track.org. செய்தி வெளியிட்டுள்ளது.
மார்ச் 2018ல் Plesetsk cosmodrome-ல் இருந்து Soyuz-2.1b ஏவுவாகனம் மூலம் ஏவப்பட்ட ரஷ்ய இராணுவ உளவு செயற்கைக்கோள் Kosmos 2525 பூமியின் சுற்றுப்பாதையில் வெற்றிகாரமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், Kosmos 2525 செயற்கைக்கோள் பசிபிக் பெருங்கடலில் மேல்பரப்பில் உடைந்ததாக space-track.org-ல் வெளியிடப்பட்ட அமெரிக்க விமானப்படை தரவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராணுவத்தின்படி, Kosmos 2525 ஏப்ரல் 1 ஆம் தேதி பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்துள்ளது.
பின் தெற்கு பசிபிக் பெருங்கடல் மேற்பரப்பில் சுமார் 4:43 GMT மணிக்கு இந்த உடைந்தது என தகவல் தெரிவித்துள்ளது.
?️?? - Le satellite espion russe #Kosmos-2525 s'est désintégré aujourd'hui en rentrant sur #Terre, après 3 ans de mission secrète en orbite basse. Sa rentrée atmosphérique avait débutée en février dernier.
— Actualités Spatiales? (@ActuSpatiales) April 1, 2021
(?? @planet4589 / https://t.co/Zs4wi2xjDN) #Espace #Roscosmos pic.twitter.com/ymIv0PThJP
3 வருட ரகசிய பணிக்குப் பிறகு பூமிக்கு திரும்பும்போது செயற்கைக்கோள் உடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. ஆனால், இதுவரை செயற்கைக்கோள் உடைந்தது குறித்து ரஷ்ய தரப்பிலிருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இதுவரை, செயற்கைக்கோள் அல்லது அது எதற்காக ஏவப்பட்டது என்பது குறித்து ரஷ்ய எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், Kosmos 2525 செயற்கைக்கோளின் செயல்பாடு குறித்து இன்று வரை மர்மம் நீடிக்கிறது.