சுட்டெரிக்கும் வெயிலில் தாகத்தில் தவித்த ஆப்கானிஸ்தான் குழந்தைகள்.. அமெரிக்க இராணுவ வீரர் செய்த செயல்! வைரலாகும் வீடியோ
சுட்டெரிக்கும் வெயிலில் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே தாகத்தில் தவித்த ஆப்கானிஸ்தான் குழந்தைகளுக்கு அமெரிக்க இராணுவ வீரர் தண்ணீர் குடிப்பாட்டிய காட்சிகள் இணைத்தில் வைரலாகியுள்ளது.
ஆகஸ்ட் 15ம் திகதி ஜனாதிபதி அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பியோடியதை தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்தது.
இதனையடுத்து, நாட்டை விட்டு வெளியே ஆயிரக்கணக்கான அப்கானியர்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருவதால், அங்கு தொடர்ந்து பரபரப்பு நீடித்து வருகிறது.
காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில், அமெரிக்கா, பிரித்தானியா உட்பட வெளிநாட்டு படைகள், ஆப்கான் பாதுகாப்பு படையினர் மற்றும் தலிபான்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து கடந்த சில நாட்களாக காபூல் விமான நிலையத்தில் நடந்த துயர சம்பவங்களின் காட்சிகள் வெளியாகி கவலையை ஏற்படுத்தி வரும் நிலையில், முதன்முறையாக மனிதாபிமான காட்சி வெளியாகி நெகிழ வைத்துள்ளது.
சுட்டெரிக்கும் வெயிலில் ஆப்கானியர்கள் பலர் தங்கள் குழந்தைகளுடன் ஒன்று அல்லது இரண்டு நாட்களாக காபூல் விமான நிலையத்திற்கு வெளியே காத்திருக்கிறார்கள்.
விமான நிலையத்தை சுற்றியுள்ள நுழைவு வாயில்கள் துர்நாற்றத்துடன் குப்பை மேடு காட்சியளிக்கிறது.
American service member gives water to #Afghan children while they wait to be allowed to enter the base. It’s baking hot and many people have been outside for a day or two. No bathrooms, and the entire area reeks of urine and rotting garbage. #afghanistan #AfghanistanCrisis pic.twitter.com/sOeEhKgH4f
— Jane Ferguson (@JaneFerguson5) August 22, 2021
இந்நிலையில், சுட்டெரிக்கும் வெயிலில் விமான நிலையத்திற்கு உள்ளே செல்ல காத்திருக்கும் ஆப்கானிஸ்தான் குழந்தைகளுக்கு, அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் தண்ணீர் குடித்த காட்சிகள் இணைத்தில் வைரலாகியுள்ளது.
இந்த காட்சியை கண்ட பலர் இராணுவ வீரரின் மனிதாபிமானத்தை பாராட்டி வருகின்றனர்.