உக்ரைனுக்கு வழங்க திட்டமிட்ட... சாம்பல் கழுகு ட்ரோன்கள்: முடிவை மாற்றிக் கொண்ட அமெரிக்கா
உக்ரைனுக்கு வழங்க திட்டமிட்டு இருந்த நான்கு MQ-1C ரக சாம்பல் கழுகு ட்ரோன்களை அமெரிக்க வெள்ளை மாளிக்கை திடீரென ரத்து செய்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை, இருநாடுகளுக்கு இடையிலான மோதலாக மட்டும் இல்லாமல் மேற்கத்திய நாடுகளும் ரஷ்யாவிற்கும் இடையிலான மறைமுக பனிப்போராக மாறியுள்ளது.
உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைகளை ஆரம்பம் முதலே எதிர்த்த மேற்கத்திய நாடுகள், அதனை கண்டிக்கும் வகையில் ரஷ்யாவிற்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தன.
?? The White House has suspended the transfer of four MQ-1C Gray Eagle drones to the Ukrainian Armed Forces due to fears that American technology will fall into the hands of the Russians. pic.twitter.com/Ls5BpOZBNa
— ТРУХА⚡️English (@TpyxaNews) June 18, 2022
இருப்பினும் உக்ரைனை கைப்பற்றும் ரஷ்ய ராணுவ படைகளின் அத்துமீறிய முயற்சி முடிவடையாத நிலையில், ரஷ்யாவை எதிர்த்து போராடுவதற்கு வசதியாக அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு அதிநவீன மேற்கத்திய ராணுவ ஆயுதங்களை வழங்க தொடங்கினர்.
இந்தநிலையில், உக்ரைனுக்கு வழங்குவதற்காக அமெரிக்கா திட்டமிட்ட இருந்த நான்கு MQ-1C ரக சாம்பல் கழுகு ட்ரோன்களை (Gray Eagle drones) திடீரென அமெரிக்க வெள்ளை மாளிகை ரத்து செய்துள்ளது.
இதற்கு அமெரிக்காவின் அதிநவீன ராணுவ தொழில்நுட்பம் ரஷ்யர்களின் பிடியில் சிக்கி கொள்ளக்கூடாது என்ற பயமே முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: சீனாவின் பெட்ரோ கெமிக்கல் ஆலையில் பயங்கர வெடிப்பு விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்!
அதிநவீன மேற்கத்திய ராணுவ ஆயுதங்கள் உக்ரைனுக்கு தேவை, அப்போது தான் ரஷ்யர்களை எதிர்த்து உக்ரைனிய வீரர்களால் தொடர்ந்து சண்டையிட முடியும் என அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தொடர் கோரிக்கை முன்வைத்து கொண்டு இருக்கும் நிலையில் அமெரிக்காவின் இந்த தீடீர் முடிவு தெரியவந்துள்ளது.