உக்ரைனின் அரிய மண் வளம் அமெரிக்காவுக்கு வேண்டும்! சர்ச்சையை கிளப்பியுள்ள டிரம்ப் கருத்து
உக்ரைன் தங்களது அரிய மண் வளத்தை அமெரிக்காவுக்கு வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அரிய மண் வளம் அமெரிக்காவுக்கு வேண்டும்
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் அமெரிக்காவின் ஆதரவு தொடர வேண்டும் என்றால், உக்ரைன் தங்களது அரிய மண் வளத்தை அமெரிக்காவுக்கு வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார்.
இது தொடர்பாக ஓவல் அலுவலகத்தில் திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு அதன் ஐரோப்பிய கூட்டாளிகளை விட அமெரிக்கா அதிக உதவிகளை செய்து வருகிறது.
இதற்கு மாற்றாக உக்ரைனுடன் புதிய ஒப்ப்ந்தம் செய்து கொள்ள அமெரிக்கா தற்போது விரும்புகிறது, இந்த ஒப்பந்தத்தின் படி, அமெரிக்காவின் உதவிகளுக்கு பதிலாக உக்ரைன் தங்களிடம் உள்ள அரிய மண் வளத்தை அமெரிக்காவுக்கு வழங்க வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதற்கு உக்ரைனும் தயாராக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. நாம் நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர்களை செலவிடுகிறோம், அவர்களிடம் மிகச் சிறந்த மண் வளம் உள்ளது, அதனை பாதுகாக்க நான் விரும்புகிறேன் என்றும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தம்
மேலும், உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.
அதே சமயம் அமெரிக்கா-ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தையில் உக்ரைனின் இருப்பு இல்லாமல் எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தங்களையும் உக்ரைன் ஏற்றுக் கொள்ளாதது என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |