துபாயில் 3 இந்தியர்கள் விஷம் குடித்து மரணம்
துபாயில் விஷம் குடித்து 3 இந்தியர்கள் உயிரிழந்தனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரத்தில் வட இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இந்தியர்கள் 3 பேர், அவர்கள் வீட்டில் விஷம் அருந்தி இறந்து கிடந்தனர்.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள உதய்பூரைச் சேர்ந்த ராமச்சந்திரா (36), பரஷ் ராம் குர்ஜார் (23), ஷியாம்லால் குர்ஜார் (29) ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.
இவர்கள் துபாயில் உள்ள தனியார் துப்புரவு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர்.
1-ராம் சந்திரா, 2-பரஷ் ராம் கர்ஜார்
ஞாயிற்றுக்கிழமை இரவு தூங்கச் சென்ற மூவரும் காலையில் இறந்து கிடந்தனர்.
உடல்கள் துபாய் பொலிஸ் பிணவறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சமூக சேவகர் நசீர் வதனப்பள்ளி தெரிவித்தார்.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் மரணத்திற்கான சரியான காரணம் தெரியும். பொலிஸார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கனடாவில் திருடப்பட்ட 400 கிலோ தங்கக் கட்டிகள்., இந்தியாவிற்கு கடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸ் சந்தேகம்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |