ஒரே ஓவரில் 45 ஓட்டங்கள் - சாதனை படைத்த ஆப்கானிஸ்தான் வீரர்
ஆப்கானிஸ்தான் வீரர் உஸ்மான் கனி, ஒரே ஓவரில் 45 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
உஸ்மான் கனி
இங்கிலாந்தில், ECS T10 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற போட்டியில், லண்டன் கவுண்டி கிரிக்கெட் கிளப்(LLC) மற்றும் கில்ட்ஃபோர்டு அணிகள் மோதியது.
இதில் லண்டன் அணி, 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 226 ஓட்டங்கள் எடுத்தது.
227 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கில்ட்ஃபோர்டு அணி, 10 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம், 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கில்ட்ஃபோர்டு அணி வெற்றி பெற்றது.
ஒரே ஓவரில் 45 ஓட்டங்கள்
இதில், லண்டன் அணி அணித்தலைவர் உஸ்மான் கனி, 43 பந்துகளில், 11 பவுண்டரி, 17 சிக்ஸர்கள் உட்பட 153 ஓட்டங்கள் எடுத்தார்.
கில்ட்ஃபோர்டு பந்து வீச்சாளர் வில் எர்னி வீசிய ஒரு ஓவரில், உஸ்மான் கனி 45 ஓட்டங்கள் எடுத்தார்.
6+ நோ பால், 6, 4+ வைட், 6, 4+ நோ பால், 6, 0, 6, 4 என மொத்தம் 45 ஓட்டங்களில், அவர் 42 ஓட்டங்கள் எடுக்க 3 ஓட்டங்கள் எக்ஸ்ட்ராவில் கிடைத்தது.
இதற்கு முன்பு, எந்த துடுப்பாட்ட வீரரும், ஒரு ஓவரில் இவ்வளவு ஓட்டங்கள் எடுத்ததில்லை.
29 வயதான உஸ்மான் கனி, 2014 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தான் அணிக்காக 17 ஒருநாள் மற்றும் 35 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |