இந்திய மாநிலத்தில் படகு கவிழ்ந்து 4 பேர் மரணம் - அதிர்ச்சி சம்பவம்
உத்தரபிரதேச மாநிலத்தில் படகு கவிழ்ந்ததில் 4 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படகு கவிழ்ந்து 4 பேர் மரணம்
உத்தரப்பிரதேச மாநிலம், மால்தேபூர் கங்கா காட் பகுதியில் கங்கை ஆற்றில் சடங்கு நடத்தும் நிகழ்ச்சிக்கு ஏராளமானோர் ஆற்றங்கரையில் கூடியிருந்தனர். ஒரு படகில் 30க்கும் மேற்பட்டோர் ஏற்றிக் கொண்டு ஆற்றில் சென்றுக்கொண்டிருந்தது.
இந்நிலையில் திடீரென படகு என்ஜினில் கோளாறு ஏற்பட்டு, ஆற்றின் நடுப்பகுதியில் படகு குப்புற கவிழ்ந்தது. இது குறித்து, பொலிசாருக்கும், மீட்புக்குழுவினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
உயிருக்கு போராடியவர்கள் மீட்பு
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசாரும், மீட்புப்படையினரும் ஆற்றில் உயிருக்கு போராடியவர்களை மீட்டனர். இந்த விபத்தில், 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆற்றில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட பொலிசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரோடு மீட்கப்பட்டவர்கள் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தலைமறைவான படகோட்டியை தேடி வருகின்றனர்.
#WATCH | Uttar Pradesh: 3 women died and 4 hospitalised after a boat capsized in Ballia. Rescue operations underway pic.twitter.com/E6GkqKfusG
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) May 22, 2023
Four Dead in #GangesBoatTragedy
— RT_India (@RT_India_news) May 22, 2023
An overloaded boat with 40 passengers, mostly women and children, capsized near Ballia in Uttar Pradesh.
The death toll could yet rise with 20+ reported missing as rescue operations continue.
The incident occurred during a 'mundan' ceremony… pic.twitter.com/YJEfNe2fMP