மாநிலத்தையே உலுக்கிய துயர சம்பவம்! நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி
இந்திய மாநிலம் உத்தரகாண்ட்டில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
60 பேருடன் பயணித்த பேருந்து
உத்தரகாண்ட் மாநிலம் பவுரி என்ற இடத்தில் பேருந்து ஒன்று 60 பேருடன் ராம்நகர் நோக்கி பயணித்தது. மார்ச்சூலா பகுதியை கடந்தபோது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் 200 மீற்றர் ஆழமுள்ள பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து பாரிய விபத்திற்குள்ளானது. இது குறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட படையினர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
36 பேர் பலி
இந்த பாரிய விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியில் அல்மோரா மாவட்ட பேரிடர் மேலாண்மை தெரிவித்தது.
ஆனால் பின்னர் பலி எண்ணிக்கை உயர்ந்து 36 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நிவாரண உதவியாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |