ஒரே சிறையில் பெண் கைதி உட்பட 44 கைதிகளுக்கு HIV பாதிப்பு
உத்திரகாண்டில் ஒரு பெண் கைதி உட்பட 44 கைதிகளுக்கு எச்ஜவி பாதிப்பு இருப்பதாக பரிசோதனையில் தெரிய வந்ததும் சிறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
44 கைதிகளுக்கு எச்ஜவி பாதிப்பு
உத்திரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள சிறைச்சாலையில் ஒரு பெண் கைதி உட்பட, 44 பேருக்கு 44 கைதிகளுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுசீலா திவாரி மருத்துவமனையின் ஏஆர்டி மைய பொறுப்பாளர் டாக்டர் பரம்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.
@ani
இந்த சிறைச்சாலையில் 1,629 ஆண் கைதிகளும், 70 பெண் கைதிகளும் உள்ளனர். இந்த சிறையில் அடுத்தடுத்து கைதிகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
@gettyimages
அதில், ஒரு பெண் கைதி உள்பட 44 கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சிறை நிர்வாகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து அதிகரிப்பு
கைதிகளின் சிகிச்சை குறித்து டாக்டர் சிங் கூறுகையில்,
“எச்.ஐ.வி நோயாளிகளுக்காக ஏஆர்டி (ஆன்டிரெட்ரோவைரல் தெரபி) மையம் அமைக்கப்பட்டுள்ளது, அங்கு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது, எனது குழுவினர் சிறையில் உள்ள கைதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
@ani
சிறையில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இலவச சிகிச்சையும் மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
Uttarakhand | 44 prisoners were found HIV positive in jail in Haldwani, one female prisoner has also been found HIV positive
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) April 9, 2023
An ART (Antiretroviral Therapy) center has been set up for HIV patients, where infected patients are treated, my team constantly examines the prisoners in… pic.twitter.com/RipqtuHWax
மேலும், மருத்துவர்கள் குழு சிறையில் உள்ள கைதிகளுக்கு தொடர்ந்து பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பாதிப்பு எண்ணிக்கை உயருமா என்பது பரிசோதனைக்கு பிறகே தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.