சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டம்.., தயார் நிலையில் ஹெலிகாப்டர்கள், 30 ஆம்புலன்ஸ்கள்
உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியதால், ஹெலிகாப்டர்கள், 30 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருக்கின்றனர்.
சுரங்க விபத்து
உத்தரகாண்ட் மாநிலம், உத்தர்காஷி என்ற இடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அங்கு, திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கத்தின் ஒரு பகுதி அப்படியே மூடியது.
இதனால், அங்கு வேலை செய்து கொண்டிருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கினர். இவர்களை மீட்கும் பணி கடந்த 10 நாள்களுக்கும் மேல் நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு தேவையான உணவு குழாய் மூலம் அனுப்பப்படுகிறது.
மேலும், தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக குழாய் வழியாக ஆக்சிஜன், உணவு, மாத்திரைகள் ஆகியவை வழங்கப்பட்டது.
மீட்பு பணிகள்
சுரங்கத்தில் 57 மீட்டர் தூரத்தில் தொழிலாளர்கள் சிக்கியிருப்பதால், அவர்களை எளிதாக மீட்டு விடலாம் என்று அதிகாரிகள் நினைத்த நிலையில், அது சவாலாக இருந்தது. இதனால், அமெரிக்காவில் இருந்து நவீன துளையிடும் இயந்திரமும், அவுஸ்திரேலியாவில் இருந்து நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.
தற்போது, மொத்தம் உள்ள 57 மீட்டரில் 45 மீட்டர் தொலைவுக்கு துளையிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், துளையிடும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், எந்த நேரத்திலும் தொழிலாளர்கள் வெளியில் வரலாம் என்பதால் உத்தர்காசியில் 41 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை, 30 -க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |