கேதார்நாத்தில் கடுமையான பனிப்பொழிவு; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
இந்திய மாநிலம் உத்தரகாண்ட்டின் கேதார்நாத் தாமில் கடுமையான பனிப்பொழிவு பொழிந்து வருவதால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
கேதார்நாத்தில் கடுமையான பனிப்பொழிவு
உத்தரகாண்ட் மாநிலம் கேதர்காட்டி மற்றும் கேதார்நாத் தாமில் கடுமையான பனிப்பொழிவு பொழிந்து வருவதால் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இந்த பனிப்பொழிவு அடுத்த வாரத்திற்கு நீடிக்கும் என்றும், இதனால் இப்பகுதிகளில் வானிலை மிகவும் மோசம் அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
உத்தரகாண்ட் அரசு நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து, கேதார்நாத் தாம் யாத்திரைக்கான யாத்ரீகர்களின் பதிவை உத்தரகாண்ட் அரசு உடனடியாக நிறுத்தியுள்ளது. தொடர்ந்து சில நாட்களாக கேதார்நாத் பனிப்பொழிவு பொழிந்து வருவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இது குறித்து அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கேதார்நாத் தாமில் அடுத்த 6, 7 நாட்களுக்கு பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
उत्तराखंड में भारी बर्फबारी से केदारनाथ बर्फ की मोटी परत से ढक गया है....
— Rakshitanagar ?? (@rakshitanagar28) April 24, 2023
जय हो भोलेनाथ ❤️?#Uttrakhand #Kedarnath #CharDhamYatra2023 #Snowfall @pushkardhami#Kedarnath pic.twitter.com/9fO4MlDZBY
श्री केदारनाथ धाम से #LIVE#Kedarnath #Snowfall ??? pic.twitter.com/feJ3cSZOya
— श्री केदारनाथ (@ShriKedarnath) April 20, 2023
उत्तराखंड के केदारनाथ में भारी बर्फबारी हुई जिसके बाद चारों ओर बर्फ की मोटी परत जम गई है. बर्फबारी के बाद तापमान में गिरावट आई है. #Uttrakhand #Kedarnath #Snowfall #temprature #Weather pic.twitter.com/qPbFf7NDa8
— Bharat Express (@BhaaratExpress) April 24, 2023