கொரோனா இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவருக்கு நேர்ந்த சோகம்! வெளியான அதிர்ச்சி தகவல்
இஸ்ரேலில் இரண்டு தடுப்பூசி செலுத்தி கொண்ட நபர் ஒருவர் Omicron வைரஸ் பாதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டு தோன்றிய கொரோனா வைரஸ் இன்று வரை உலக நாடுகளை வாட்டி வதைத்து வருகின்றது. கொரோனாவில் இருந்து உருமாறிய புதிய வகை வைரஸ் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.
இதை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போன்ற 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த புதிய வகை வைரஸுக்கு Omicron என்று உலக சுகாதாரத்துறை பெயரிட்டுள்ளது.
டெல்டாவை விட இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதாக சில ஆய்வுகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவை தொடர்ந்து இஸ்ரேலில் முதல் Omicron பலி ஏற்பட்டுள்ளது.
60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் omicron தொற்றின் சில அறிகுறிகள் தென்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். இவர் இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தி கொண்டது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறியதாவது, அவருக்கு Omicronனுடன் சேர்ந்து மற்ற நோய்களும் இருந்ததால் அவர் எப்படி இறந்தார் என்பது உறுதியாக சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளனர்.