கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றால்? இதை செய்ய வேண்டும்! WHO சொன்ன புதிய தகவல்
கொரோனா பரவலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றால், மக்கள் தொகையில் 70 சதவீதம் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும், என உலக சுகாதார அமைப்புக்கான ஐரோப்பிய இயக்குனர் ஹான்ஸ் க்ளூஜ் தெரிவித்துள்ளார்.
உலகைய கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகளே திணறிக் கொண்டிருக்கின்றன. என்ன தான் முகக்கவசம், சமூக இடைவெளி என்று இருந்தாலும், தடுப்பூசி என்பது மிகவும் முக்கியம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
தடுப்பூசியால் மட்டுமே இந்த நோயை கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் பலர் கூறி வருகின்றனர். இந்நிலையில், உலக சுகாதார அமைப்புக்கான ஐரோப்பிய இயக்குனர் ஹான்ஸ் க்ளூஜ், கொரோனா பரவல் முடிந்துவிட்டதாக எண்ண வேண்டாம்.
கொரோனா தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஐரோப்பாவில் தடுப்பூசி செலுத்தும் வேகம் குறைவாக உள்ளது. கொரோனா முடிவுக்கு கொண்டுவர மக்கள் தொகையில் 70 சதவீதம் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.
ஐரோப்பாவில் இதுவரை 19 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதுவே உலக மக்கள் தொகையில் இதுவரை 10 சதவீதம் மக்களுக்கே கொரோனா தடுப்பூசி செலுத்தபட்டுள்ளது.
இதில் இஸ்ரேல், அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில் தடுப்பூசி பெரும்பாலான மக்களுக்கு போடப்பட்டுவிட்டதால், அங்கு இயல்பு வாழ்க்கை மெல்ல, மெல்ல திரும்பிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.