புதிய வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி! 50 ஓவரில் 574 ஓட்டங்கள்..நொறுங்கிய ஜாம்பவானின் சாதனை
விஜய் ஹசாரே தொடரில் வைபவ் சூர்யவன்ஷி புதிய வரலாற்று சாதனை படைத்தார்.
சிக்ஸர் மழை பொழிந்த வைபவ் சூர்யவன்ஷி
அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான விஜய் ஹசாரே போட்டியில், பீகார் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சிக்ஸர் மழை பொழிந்தார்.
அதிரடியில் மிரட்டிய சூர்யவன்ஷி 36 பந்துகளில் சதம் அடித்தார். இதன்மூலம் ஆடவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சதம் அடித்த மிக இளம் வீரர் என்ற வரலாறு படைத்தார்.
தனது 7வது லிஸ்ட் ஏ போட்டியிலேயே இந்த சாதனையைப் படைத்த அவர், 59 பந்துகளில் 150 ஓட்டங்கள் விளாசினார்.
190 ஓட்டங்கள்
இதன்மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக 64 பந்துகளில் 150 ஓட்டங்கள் குவித்த ஏ பி டிவில்லியர்ஸின் சாதனையை முறியடித்தார்.
மொத்தம் 84 பந்துகளை எதிர்கொண்ட வைபவ் சூர்யவன்ஷி 15 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகளுடன் 190 ஓட்டங்கள் விளாசினார்.
சாஹிபுல் கானி 122 (39) ஓட்டங்களும், ஆயுஷ் ஆனந்த் 116 (56) ஓட்டங்களும் விளாச, பீகார் அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 574 ஓட்டங்கள் குவித்தது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |