முதலமைச்சர் வந்தால் கறிச்சோறு போடுவோம்..! வைரமுத்துவின் ட்வீட்
நரிக்குறவர் இனத்தவர் வீட்டில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உணவருந்தியது குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை ட்வீட் செய்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவடி பேருந்து நிலையம் அருகே உள்ள நரிக்குறவர் குடியிருப்பு பகுதிக்கு சென்றார். அங்கு நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த மாணவிகளை சந்தித்த அவர், ஏற்கனவே தங்கள் இல்லத்திற்கு வர வேண்டும் என அவர்கள் விடுத்திருந்த அழைப்பை ஏற்று அவர்களது இல்லத்திற்கு சென்றார்.
முதலமைச்சரின் வருகையை பார்த்து மகிழ்ந்த பெண்ணொருவர், தனது வீட்டில் சமைக்கப்பட்ட இட்லி, வடை மற்றும் அதனுடன் நாட்டுக்கோழி குழம்பு சிற்றுண்டியை அவருக்கு வழங்கினார். அதனை உண்டு மகிழ்ந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
ஏற்கனவே மாணவிகள் தங்கள் வீட்டிற்கு அழைப்பு விடுத்தபோது சோறு போடுவிங்களா என்று ஸ்டாலின் கேட்க, கறிச்சோறு போடுவோம் வாங்க என மாணவிகள் பதிலளித்தனர். அதன்படியே இட்லியுடன் நாட்டுக்கோழி குழம்பு அளித்துள்ளனர். இந்நிலையில் இந்த நிகழ்வு குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்.
அதில், 'முதலமைச்சர் வந்தால் கறிச்சோறு போடுவோம் என்றார்கள். கறிச்சோறு போட்டு நாங்கள் வாக்குத் தவறாதவர்கள் என்று மெய்ப்பித்துவிட்டார்கள் நரிக்குறவர் இனத்து நல்ல மக்கள். அதைச் சாப்பிட்டு நான் நாக்குத் தவறாதவன் என்று மெய்ப்பித்துவிட்டார் முதலமைச்சர். அம்பேத்கருக்கு இன்று இன்னுமொரு பிறந்தநாள்' என கூறியுள்ளார்.
முதலமைச்சர் வந்தால்
— வைரமுத்து (@Vairamuthu) April 15, 2022
கறிச்சோறு போடுவோம்
என்றார்கள்
கறிச்சோறு போட்டு
நாங்கள் வாக்குத் தவறாதவர்கள்
என்று மெய்ப்பித்துவிட்டார்கள்
நரிக்குறவர் இனத்து
நல்ல மக்கள்
அதைச் சாப்பிட்டு
நான் நாக்குத் தவறாதவன்
என்று மெய்ப்பித்துவிட்டார்
முதலமைச்சர்
அம்பேத்கருக்கு
இன்று
இன்னுமொரு பிறந்தநாள் pic.twitter.com/21bNU2noAW