மூடநம்பிக்கை என்றாலும் எங்களைக் கலைஞரும் வாழ்த்தியிருப்பார்: பரபரப்பான வைரமுத்துவின் கருத்து
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தமிழர் திருநாள் வாழ்த்து பெற்ற நிலையில் கவிஞர் வைரமுத்து பரபரப்பாகும் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
பொங்கல் திருநாள்
பொதுவாக, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் போது காலையிலேயே குளித்து புத்தாடை அணிந்து பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டு, பண்டிகையைக் கொண்டாடுவார்கள். கிராமங்களில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்துவர்.
அந்தவகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நேற்று பட்டு வேட்டியும், க்ரே கலர் சட்டையும் அணிந்து பொங்கல் பண்டிகையை தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கோலாகலமாக கொண்டாடினார்.
அதுமட்டுமல்லாமல், மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரது நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
வைரமுத்துவின் கருத்து
இந்நிலையில், தமிழக அமைச்சர்களான எஸ். ரகுபதி, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பழனிவேல் தியாகராஜன், செஞ்சி கே. எஸ்.மஸ்தான், சி.வி.கணேசன் ஆகியோர் தமிழக முதலமைச்சரை சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர். அந்தவகையில் கவிஞர் வைரமுத்துவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரை சந்தித்தது குறித்து வைரமுத்து தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "முதலமைச்சரை சந்தித்துத் தமிழர் திருநாள் வாழ்த்துரைத்தேன். அவரும் என்னை வாழ்த்தினார். கோபாலபுரத்தில் கலைஞர் கோலோச்சிய கூடத்தில் இந்தச் சந்திப்பு நிகழ்ச்சி நிகழ்ந்ததில் மகிழ்ச்சி.
மாண்புமிகு
— வைரமுத்து (@Vairamuthu) January 16, 2024
முதலமைச்சர் அவர்களைச் சந்தித்துத்
தமிழர் திருநாள்
வாழ்த்துரைத்தேன்;
அவரும் என்னை வாழ்த்தினார்
கோபாலபுரத்தில்
கலைஞர்
கோலோச்சிய கூடத்தில்
இந்தச் சந்திப்பு நிகழ்ச்சி
நிகழ்ந்ததில் மகிழ்ச்சி
மூடநம்பிக்கை என்றாலும்
எங்களைக் கலைஞரும்
வாழ்த்தியிருப்பார்
என்று எண்ணாமல்… pic.twitter.com/EjKVUmuxd7
மூடநம்பிக்கை என்றாலும் எங்களைக் கலைஞரும் வாழ்த்தியிருப்பார் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை" எனப் பதிவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |