மணமகன் உட்பட 9 பேர் விபத்தில் உடல் நசுங்கி பலி! திருமணத்திற்கு சென்றபோது நேர்ந்த சோகம்
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் திருமணத்திற்கு சென்ற குடும்பத்தினர் 9 பேர் சாலை விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
திருமணத்திற்கு சென்ற வேன்
சிந்து மாகாணம் சுக்கூர் - முல்தான் நெடுஞ்சாலையில் வழியாக திருமண விழாவிற்கு மணமகன் தனது குடும்பத்துடன் வேன் ஒன்றில் பயணித்துள்ளார்.
அப்போது வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறியது. இதனால் எதிரே வந்த லொறி ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இதில் மணமகன் உட்பட குடும்பத்தினர் 9 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஓட்டுநர் கைது
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். லொறி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். இந்த விபத்தில் படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு சென்ற மணமகனும், அவரது குடும்பத்தினரும் சாலையில் விபத்தில் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
INDIA TV
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |