போப் பிரான்சிஸின் உடல்நிலை எப்படி இருக்கிறது? வத்திகான் வெளியிட்ட அறிக்கை
கடந்த 24 மணிநேரத்தில் போப் பிரான்சிஸின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வத்திகான் தெரிவித்துள்ளது.
போப் பிரான்சிஸ்
கத்தோலிக்க கிருத்துவர்களின் தலைவராக கருதப்படும் போப் பிரான்சிஸ் மூச்சுக்குழாயில் அழற்சி, சிறுநீரகப் பிரச்சனை காரணமாக ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வத்திகான் கூறியிருந்தது.
கடந்த 24 மணிநேரத்தில்
இந்த நிலையில் வத்திகான் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் போப் பிரான்சிஸ் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சிறுநீரக பிரச்சனை சரியாகி வருகிறது. தற்போது நுரையீரல் வீக்கம் சரியாகி வருகிறது. இன்று நடத்தப்பட்ட ரத்த பரிசோதனைகள் மூலம் அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவது உறுதி செய்யப்பட்டது.
அவருக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து குணமடைந்து வருவதால் போப் மருத்துவமனை அறையில் வழக்கமான பணிகளை மேற்கொண்டார் என கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |